ETV Bharat / bharat

'நாட்டின் 5 மாநிலங்களே 60% கரோனா பாதிப்பை எதிர்கொள்கின்றன' - தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களே  நாட்டின் 60 விழுக்காடு கரோனா பாதிப்பை எதிர்கொள்கின்றன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

5-states-in-india-still-account-60-percent-of-total-covid-cases-health-minister

author img

By

Published : Sep 14, 2020, 1:45 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 ஆயிரத்து 71 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 136 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக தொற்று பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, 53 விழுக்காடு கரோனா உயிரிழப்புகள் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தில் பதிவாகியுள்ளன.

மேலும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களே நாட்டின் 60 விழுக்காடு கரோனா பாதிப்பை எதிர்கொள்கின்றன.

சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரேநாளில் (செப். 13) 77 ஆயிரத்து 512 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 80 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 78 ஆக அதிகிரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.