கரோனா பாதிப்பு தொடர்பான நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் 60 விழுக்காடு கரோனா பாதிப்புகள் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடாகா, உத்தரப்பிரதேம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே உள்ளது.
நாட்டின் மொத்த பாதிப்பில் 21.6 விழுக்காடு எண்ணிக்கை மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே உள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 11.8%, தமிழ்நாட்டில் 11%, கர்நாடகத்தில் 9.5%, உத்தரப்பிரதேசத்தில் 6.3% பாதிப்புகள் உள்ளன.
இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 42 லட்சத்து 4 ஆயிரத்து 614ஆக உள்ளது. மொத்த உயிரிழப்பு 71 ஆயிரத்து 642ஆக உள்ள நிலையில் இந்த உயிரிழப்பின் 70% இந்த ஐந்து மாநிலங்களிலிருந்தே நிகழந்துள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்தானது - நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!