ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் சீர், படகுண்ட் கிராமங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினர், அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக சந்தேத்திற்கிடமான மேலும் சில நபர்களை விசாரணை காவலில் வைத்துள்ளனர். இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நடந்துவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.