அண்மைக்காலமாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அத்துமீறி இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி தந்துவருகிறது.
இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பயங்கரவாதக் கும்பலும் ஊடுருவ முயன்றுவருகின்றன. இருப்பினும், நாட்டின் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பால் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் அவர்களின் சதி வேலைகளும் தகர்க்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் பின்ஜோரா பகுதியில் உலாவிய பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுவீழ்த்தப்பட்டனர்.

இந்தச் செயலில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து காவல் துறையும் ஈடுபட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை உளவு பார்க்கவந்த பாகிஸ்தான் ’புறா’