பீகார் மாநிலத்தின் பாஷ்சிம் சம்பரன் மாவட்டம், இந்தியா - நேபால் எல்லை பகுதியை அருகே உள்ளது. இந்த மாவட்டத்தின் பாகாகா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு அதிரடிப்படை காவல் படைக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், சஷஸ்திர சீமா பால் மற்றும் சிறப்பு அதிரடிப்படை காவல் சம்பவ இடத்திற்கு விரைந்தது. அப்போது இன்று (ஜூலை 10) அதிகாலை 4.45 மணியளவில் சிறப்பு அதிரடி காவல் படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஏகே-47, எஸ்எல்ஆர், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட நவீனரக ஆயுதங்களை சிறப்பு அதிரடி காவல் படை பறிமுதல் செய்தது.
காவல்துறை தரப்பில் சஷஸ்திர சீமா பால் இன்ஸ்பெக்டர் ரித்து ராஜூவிற்கு காயம் ஏற்பட்டது.