கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்திச் செல்லப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரின் திங்கள்கிழமை காலை வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஷார்ஜா, துபாய், ரியாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 11.29 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4.15 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளை மறைத்து எடுத்துச் சென்ற நான்கு பேரை கைது செய்த அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.