மகாராஷ்டிரா மாநிலம் மல்காபூரிலிருந்து, குஜராத் மாநிலம் சூரத்திற்கு பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. பேருந்து கொண்டைபரி காட் என்ற பள்ளத்தாக்கின் மேல் சென்றபோது, 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் நந்தூர்பார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நந்தூர்பார் காவல் கண்காணிப்பாளர் மகேந்திர பண்டித் கூறுகையில், விபத்து குறித்து அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது மீட்புப் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது” என்றார்.
இதையும் படிங்க...இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு!