புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பத்து கண்ணு கிராமத்தில் தனியார் மதுக்கடை இயங்கி வருகிறது. இக்கடை அருகே நேற்று முன்தினம் (அக்.25) இரவு பைக்கில் சென்ற அடையளம் தெரியாத நபர்கள் சிலர் கடை மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். பிறகு இதுகுறித்து வில்லியனூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவந்தனர். அதன்படி இவ்வழக்கு தொடர்பாக கூடப்பாக்கம் ரவுடி சார்லி, அவரது கூட்டாளிகளான பிரேம், அணில், சுரேந்திரன் ஆகியோரை காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் சார்லி மற்றும் அவரது கூட்டாளிகள் பாரில் சம்பவம் நடந்த நாளன்று, ஓசியில் குடிக்க மது கேட்டுள்ளனர். அதை கடை ஊழியர் தரமறுத்ததால் கோபமடைந்து, அவர்கள் பார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு வீசிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: துக்க வீட்டில் நடந்த துக்க நிகழ்வு: இளைஞர் உயிரிழப்பு!