ஹைத்ராபாத்தை சேர்ந்தவர் ஹசீனா(32). (பெயர் மாற்றபட்டுள்ளது) காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் முகவராக உள்ளார். நேற்று இரவு அவரது நண்பரான மனோஜ் என்பவர் வெளிநாடு செல்லவுள்ளதால் மது விருந்து கொடுத்துள்ளார். இதில் கலந்து கொள்ள ஹசீனா சென்றுள்ளார். அப்போது அவரையும் கட்டாயப்படுத்தி மனோஜ் மது அருந்த வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து மது போதையில் இருந்த இளம்பெண்ணை தனது நண்பர்கள் ஆறுபேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் போதை தெளிந்தவுடன் அவருக்கு தான் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் வசந்தாலிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, ஆறுபேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.