கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரும், மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமாகிய ஜி. பரமேஸ்வரா உறுப்பினராகவுள்ள அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையின் மூலம் ஏராளமான கறுப்புப் பணம் குவிந்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இதனையடுத்து, நேற்று ஜி. பரமேஸ்வராவின் பெங்களூரு வீடு உள்பட அவருக்குத் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனையை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று பரமேஸ்வரா அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் வருமான வரித்துறையினர் சோதனைக்குச் சரியாக ஒத்துழைத்தேன். கடந்த 10ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். இதில் முதல் நாளில் எனது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இரண்டாவது நாளில் சில ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள் என்றார்.
மேலும் பேசிய அவர், சித்தரா மருத்துவக் கல்லூரியில் இடம்பெறுவதற்காக மூவாயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என விளக்கமளித்தார்.
மேலும் படிக்க...கர்நாடகா முன்னாள் துணை முதலமைச்சர் வீட்டில் ரெய்டு: உதவியாளர் தற்கொலை!