ETV Bharat / bharat

500 கோடி எம்.எல்.எம் மோசடி: கணவனைக் கொன்று‌ நாடகமாடிய மனைவி கைது!

ஹைதராபாத்: கணவனைக் கொன்று தற்கொலை என நாடகம் ஆடிய மனைவியை, காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

crime
crime
author img

By

Published : Jun 28, 2020, 11:08 PM IST

சென்னையைச் சேர்ந்த பிரபாகரன்(50), சுகன்யா(30) தம்பதியினர், 500 கோடி எம்.எல்.எம் ஊழல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர். இதில், பிரபாகரன் கடந்த 2012ஆம் ஆண்டு, தமிழ்நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு சுகன்யாவும் கைது செய்யப்பட்டார். பிரபாகரனுக்கு ஒரு ஆண்டிற்குள் பிணை கிடைத்து சிறையிலிருந்து வெளியே வர முடிந்தது. ஆனால், சுகன்யாவுக்கு பிணை‌ கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த சுகன்யா, கணவர் குறித்த தகவல்கள் கிடைக்காததால் மூன்று குழந்தைகளுடன் ஆந்திராவில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது, பிரபாகரன் ஹைதராபாத்தில் தங்கி இருப்பதாக, சுகன்யாவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தகவலின் பேரில் கணவரைப் பார்க்க சென்ற சுகன்யா, மற்றொரு பெண்ணுடன் தன் கணவர் வசித்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால், பிரபாகரனோ தனக்கு பக்கவாதப் பிரச்னை உள்ளதால், அப்பெண் பராமரிப்பாளராக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சந்தேகத்தில் சுகன்யா அப்பெண்ணை வீட்டிலிருந்து விரட்டியுள்ளார்‌.

சிறிது நாள்களில் பிரபாகரன் அப்பெண்னை மீண்டும் அழைத்து வருவதற்காக, தனது மனைவிக்கு தொந்தரவு அளிக்கத் தொடங்கியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுகன்யா, கணவனைக் கொலை செய்து, அதனை தற்கொலை என சித்தரிக்க காவல் துறையை அழைத்துள்ளார்.

தகவலறிந்து வந்த காவல் துறையிடம் பக்கவாதத்தால், தனது கணவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். உடலை மீட்டு காவல் துறையினர் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுகன்யா புகாரளிக்க மறுத்ததால் காவல் துறையினருக்குப் பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது‌.

இதையடுத்து, காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சுகன்யா தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்ததால் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, காவல் துறையினர் அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.