இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மஞ்சள் அட்டைதார்களுக்கு (அரசு ஊழியர் மற்றும் வருமான வரி செலுத்துவோர் நீங்கலாக)
இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தலா 10 கிலோ வீதம் 3 மாதத்திற்கு 30 கிலோ அரிசி மஞ்சள் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த அரிசியை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கி சமுதாயக் கூடம், அரசுப் பள்ளி உள்ளிட்ட பொது இடங்களில் சமூக இடைவெளியுடன் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.