ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியான அத்துமீறல்கள் நடைபெற்றுவருகின்றன. இரு நாட்டின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில், பயங்கரவாதிகளின் ஊடுருவலும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
அங்குள்ள நவ்ஷேரா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடைபெற்ற தகவல் ராணுவத்தினருக்கு கிடைத்ததையடுத்து, கடந்த 28ஆம் தேதிமுதல் அங்கு தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், சில பயங்கரவாதிகள் மறைந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் ராணுவத்தினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் தெலங்கானா!