ETV Bharat / bharat

டெல்லி கலவரம் தொடர்பாக மேலும் மூவர் கைது - டெல்லி கலவரம் தாஹிர் ஹுசைன்

டெல்லி: கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் தொடர்புடைய மூன்று பேரை டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Delhi
Delhi
author img

By

Published : Mar 8, 2020, 2:48 PM IST

வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கலவரத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில், உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் தாஹிர் ஹுசைன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இக்கலவரம் தொடர்பாக மேலும் மூன்று பேரை டெல்லி குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்துள்ளது. டெல்லி சந்த் பாக் பகுதியைச் சேர்ந்த லியாகத், ரியாசத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லி கலவரத்துக்குப் பின் கன்சா பகுதியில் தலைமறைவாக இருந்த தாரிக் ரிஸ்வி நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் மீது வழக்குப் பதிந்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்த காவல் துறை, உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் படுகொலையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்துவருகிறது.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை: முக்கிய விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.