ETV Bharat / bharat

'துபாய் இங்க தான் இருக்கு' - கனவுகளோடு ரயிலில் புறப்பட்ட சிறுவர்களின் கதை!

கனவு காணுங்கள் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கூறியது தான் நினைக்கு வருகிறது. அந்தக் கனவுகளோடு பயணத்தைத் தொடங்கிய சிறுவர்களைப் பற்றி தான் இந்த செய்தி தொகுப்பு...

துபாய்
துபாய்
author img

By

Published : Mar 12, 2020, 5:45 PM IST

உலகில் ஒவ்வொரு மனிதரின் வாழ்கையிலும் சிறிய ஆசை ஒன்று, ஒரு ஓரத்தில் இடம்பெற்றுதான் இருக்கும். சிறு வயதில் தோன்றும் ஆசைகளோ ஏராளம். நாம் தொலைக்காட்சியில் காண்பதை எல்லாம் நேரில் சென்று பார்க்க வேண்டும், சினிமாவில் விஜய், அஜித் செய்வது போலவே ரியல் வாழ்க்கையில் நடந்து கொள்வது போன்ற ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் இவ்வுலகில் பஞ்சம் இல்லை.

ஆனால், அவற்றை நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாது என்பதை பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கும் அவசரத்தில் சிறு குழந்தைகளிடம் தெரிவிப்பதற்கு மறந்து விடுகின்றனர். அவ்வாறு, குழந்தைகளின் ஆசையைக் கேட்காத பெற்றோர்களின் அலட்சியத்தால் "எப்படி செல்ல வேண்டும் தெரியாது. ஆனால் செல்ல வேண்டும்" என்ற கனவோடு புறப்பட்ட மூன்று சிறுவர்களின் கதை தான் இது...

ஆந்திராவில் விஜயவாடா ரயில் நிலையத்தில் மூன்று சிறுவர்கள் மச்சிலிபட்டினம் - திருப்பதி எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறியுள்ளனர். மூன்று சிறுவர்களும் மிகவும் குழப்பத்தில் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த சக பயணி ஒருவர், சிறுவர்களிடம் 'எங்கு செல்கிறீர்கள், யாருடன் வந்தீர்கள்' என விசாரிக்கத் தொடங்கியுள்ளார். அதற்கு சிறிவர்கள் தெரிவித்த பதில் ரயில் பெட்டிகளுக்குள் இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைத்தது. அவர்கள் நாங்கள் "துபாய்" செல்கிறோம் என கூறிவிட்டு, சாதாரணமாக இருந்துள்ளனர்.

பின்னர் நிலைமையைப் புரிந்து கொண்ட அவர், உடனடியாக ரயில்வே காவல் துறைக்கு தகவல் அளித்தார். இந்தத் தகவலின் பேரில் உடனடியாக வந்த காவல் துறையினர், குழந்தைகளை மீட்டு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து விசாரிக்கையில் சிறுவர்கள் துபாய் செல்ல வேண்டும் என்ற ஆசையில் பெற்றோர்களுக்குத் தெரிவிக்காமலேயே ரயில் ஏறியுள்ளது தெரியவந்தது.

கனவுகளோடு ரயிலில் புறப்பட்ட சிறுவர்களின் கதை

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், " சிறுவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வராவிட்டால் குழந்தைகள் நல காப்பகத்திற்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்றார்.

'கனவு காணுங்கள்' என்ற ஒற்றை வரிகளை சிறுவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளாமல், சரியான தருணத்தில் பெற்றோர்கள் அல்லது நண்பர்களின் வழிகாட்டுதலின்படி கனவை அடைய முயற்சி செய்தால் வெற்றி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இதையும் படிங்க: கொரோனா எனக்கு இருக்கானு பாருங்க...! விமான நிலையத்தை பதறவைத்த இன்ஜினியர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.