உத்தரப்பிரதேசம், சித்ரமூத் மாவட்டத்தில் சிலிமல் கிராமத்தைச் சேர்ந்த நான்பாபு நிஷாத் (வயது 12), குடா நிஷாத் (வயது 13), ராதா தேவி (வயது 8) ஆகிய மூன்று சிறுவர்களும், தர்மேந்திரா என்பவருடன் வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேய்ச்சல் முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில், திடீரென பலத்த மின்னல் ஒன்று தாக்கியுள்ளது. இந்த மின்னலில் சம்பவ இடத்திலே மூன்று சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். தர்மேந்திரா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி மேய்சலுக்குக் கொண்டு சென்று ஏழு ஆடுகளும் உயிரிழந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுவர்களின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.