சீனாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவிவருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சீனாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இதனை இந்தியாவில் பரவவிடாமல் தடுக்கும் நோக்கில் விமான நிலையங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலைங்களில் இதுவரை 137 விமானங்களில் 29,700 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என சோதனையில் தெரியவந்துள்ளது. நேற்று மட்டும் 22 விமானங்களில் 4,359 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என அமைச்சரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கேரளாவில் வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதால் 100 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!