கரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடான ஈரானிலிருந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் 277 பேரை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டு வந்துள்ளது.
மீட்டுவரப்பட்டதில் 128 ஆண்கள், 149 பெண்கள் உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்டுவரப்பட்ட அனைவரும் அங்குள்ள ராணுவ விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 14 நாள்கள் கட்டாய தனிமையில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை அங்குள்ள ராணுவ மருத்துவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இதுவரை 24 ஆயிரத்து 811 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 943 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே இத்தாலி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டுவர மூன்று விமானப்படைக் குழுக்கள் வெளியுறவுத் துறை சார்பில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியாக இருக்க டிப்ஸ் வேண்டுமா - உமர் அப்துல்லா ட்வீட்!