ராஜஸ்தான் மாநிலத்தில் சார்திவாரி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் கரோனா தொற்று பரவாமல் இருக்க, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது, அம்மாநிலத்தில் இதுவே முதல்முறையாகும்.
இதுவரை, ராஜஸ்தானில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,020ஆக உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உள்ளது.