சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த மாதம் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) பரவத்தொடங்கியது. வைரஸ் தொற்று காரணமாக வூஹான் நகரில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால், அங்கிருந்த இந்தியர்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் உள்ளிட்ட 406 நபர்கள் ஏர் இந்தியா உதவியுடன் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மேற்கு டெல்லியிலுள்ள இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் முகாமில் காண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
சமீபத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் பாண்டே, "சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 406 பேரில் 238 பேர் முகாமிலிருந்து திங்கள்கிழமை (பிப்ரவரி 17) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாலத்தீவைச் சேர்ந்த ஏழு பேர் திங்கள்கிழமை காலை 4.30-க்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மீதமுள்ளவர்களை விடுவிக்கும் பணி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தொடர்ந்து நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: இலவச வை-பை சேவையை நிறுத்தும் கூகுள் - காரணம் ஜியோவா?