மெக்சிகோ நாட்டின் தீ விபத்தை பற்றி புதன்கிழமை அந்நாட்டின் அரசுதரப்பு வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், “மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி எட்டு பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23-பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
13பேர் இந்த தீயில் சிக்கி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீக்காயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்” என கூறப்பட்டிருந்தது.