லக்னோ: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்துக்கு ஆதரவாக 224 ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
யோகி அரசின் மதமாற்ற தடை சட்டம் வன்மத்தை விதைக்கும், வன்முறையை வளர்க்கும் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் 104 பேர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த சூழலில், அச்சட்டத்துக்கு 224 ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில் இந்த சட்டத்தை எதிர்க்கும் ஐஏஎஸ் அலுவலர்களை விமர்சித்து, இச்சட்டத்தை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளனர்.
சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ப்ரமோத் கோலி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், முன்னாள் பஞ்சாப் டிஜிபி பிசி டோக்ரா உள்ளிட்ட 224 பேர் இச்சட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.