இது குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 75 இந்தியர்கள், 147 என்ஒஆர்ஐ விசா உடமையாளர்கள் என மொத்தம் 221 பேர் நவ.23ஆம் தேதி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
நவ.17ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் "கரோனா ஊரடங்கு காரணமாக பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 75 இந்தியர்கள், 147 என்ஒஆர்ஐ விசா உடமையாளர்கள் என மொத்தம் 221 பேர் நவ.23ஆம் தேதி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்" எனத் தெரிவித்திருந்தது.
அதன்படி, நேற்று(நவ.23) 221 இந்தியர்களும் பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லை வழியாக நாடு திரும்பினர். அதில், அவர்களில் 11 இந்தியா-பாகிஸ்தான் தம்பதிகள் அடங்குவர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அலுவலர்கள் 5 பேர் நாடு திரும்பினர்