கர்நாடக மாநிலம் பெலகாவியில் 2017ஆம் ஆண்டு, சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அத்துடன் குற்றவாளிகள் இதனைக் காணொலியாகப் பதிவுசெய்து மிரட்டினர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் காவல் துறையினர் சஞ்சு சித்தப்பா தாடி (24), சுரேஷ் பாரமப்பா (24), சுனில் லகமப்ப தும்மகோல் (21), மகேஷ் பாலப்பா சிவங்கோல் (23), சோம்சேகர் (23) ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு பெலகாவி நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி