ETV Bharat / bharat

உத்தரப்பிரதேசத்தில் 2 அமைச்சர்களுக்குக் கரோனா! - உத்திரபிரதேச அமைச்சர்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச அமைச்சர்கள்
உத்திரபிரதேச அமைச்சர்கள்
author img

By

Published : Jul 5, 2020, 2:48 PM IST

இந்தியா முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், சாமானியன் முதற்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் வரை தனது கோர முகத்தைக் கரோனா காட்டிவருகிறது. தமிழ்நாட்டில் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில் உத்தரப்பிரதேச மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங்குக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் சிகிச்சைக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் அம்மாநிலத்தை சேர்ந்த மற்றொரு அமைச்சர் தரம் சிங் சைனிக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "அமைச்சர் தரம் சிங் சைனி இருமல் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, அவருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பிலாக்னி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 27 நபர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.