மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் விலகலை அடுத்து, அம்மாநிலத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான தேவனஹள்ளியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் செய்துள்ளார். இவர்கள் கடந்த ஆறு தினங்களாக இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களில் இருவர் சொகுசு விடுதியிலிருந்து தப்பித்து, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தார்கள் என தகவல்கள் கசிந்துள்ளன.
இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு - 24ஆம் தேதி ஆஜராக மூவருக்கு அழைப்பாணை!