டெல்லியில் உள்ளி தனியார் தொழிற்சாலையிலுள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஏழு துப்புரவு தொழிலாளர்கள் சென்றுள்ளனர். கழிநீர் தொட்டியை சுத்தம் செய்த ஏழு பேரில் ஆறு பேரின் உடல் நிலை திடீரென்று மோசமடைந்தது. அதைத்தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இத்ரிஸ், சலிம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ள நால்வரில், இஸ்லாம் என்பவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சலிம், குர்ஜா, மன்சூர் ஆகியோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை விதித்த மத்திய அரசு சட்டம் நிறைவேற்றிய நிலையிலும், இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மாற்று பணிகளை வழங்க சட்டம் உள்ள போதிலும், ஏட்டளவில் மட்டும்தான் அது இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பப்ஜிக்கு நோ சொன்ன தந்தை, கழுத்தில் கத்தியால் கோடு போட்ட மகன்!