ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டம் கான்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சிக்கங்தர் சிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சிக்கங்தர் சிங் தனது மனைவியுடன் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவரது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த பக்கத்து வீட்டு இளைஞர் வீட்டுக்குள் நுழைந்து அச்சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பணி முடிந்து வீடு திரும்பியபோது சிறுமி தனக்கு நடந்த அவலத்தைப் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, மற்றொரு இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அதனடிப்படையில், காவல் துறையினர் போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரு இளைஞர்களையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தகராறை விலக்கிவிட சென்ற வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது!