இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே 1971ஆம் நடைபெற்ற போரில், அந்நாட்டை கதி கலங்க வைத்த ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் பர்வேஸ் ரஸ்தம் ஜமஸ்ஜி நேற்று (ஜூன் 25) காலமானார். அவருக்கு வயது 77. பர்வேஸின் துணிச்சலைப் பாராட்டும் வகையில், அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரானப் போரில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், கைத்தடியை வைத்து விமானத்தை இயக்கி, பாகிஸ்தானை கதி கலங்க வைத்தார். அப்போது, அவரின் விமானம் நான்கு முறை பாகிஸ்தான் வீரர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. இருப்பினும், சிறப்பாக செயல்பட்ட அவர், விமானத்தை மீண்டும் இந்திய எல்லைக்குள் எடுத்துவந்து அசத்தினார். அவருக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
மகாராஷ்டிராவின் தாதர் பகுதியில் வசித்துவரும் அவர் நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 1985ஆம் ஆண்டு அவர் ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதே ஒரே வழி - பிரதமர் நரேந்திர மோடி