கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று காலை வரை (மார்ச் 20) 206 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை ஐந்து பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாகப் பொது இடங்களில் தேவையில்லாமல் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க போதிய கண்டறிதல் மையம் இல்லை என்ற விமர்சனம் மக்களிடையே நிலவிவருகிறது.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பாகப் பரிசோதிக்கவும் அதற்கான ஆய்வகம் அமைத்துக் கொள்ளவும் மத்திய அரசு 18 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - உதவி எண் அறிவித்த மத்திய அரசு!