உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை, உடல் சிதைந்த நிலையில் குளத்திற்கு அருகில் பொதுமக்கள் கண்டெடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கூர்மையான ஆயுதங்கள் உபயோகித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 10 நாள்களில், இத்தகைய சம்பவங்கள் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.