நாடு முழுவதும் கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் இன்று(ஜனவரி 16) முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தினர், டெல்லியில் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்னும் இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை உயர் அலுவலர், 'முதல்நாளில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது' என்றார்.