ETV Bharat / bharat

மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய அசுர தாக்குதல்: 16 பேர் பலி! - கட்சிரோலி

மகாராஷ்டிரா: கட்சிரோலி பகுதியில் நின்றுகொண்டிருந்த பாதுகாப்புப் படை வாகனம் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 16 பேர் பலி.

மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய அசுர தாக்குதல்: 16 பேர் பலி!
author img

By

Published : May 1, 2019, 5:43 PM IST

கடந்த வாரம் கட்சிரோலி வனப்பகுதியில் நடைபெற்ற பாதுகாப்புப் படை அணிவகுப்பு ஒத்திகையின் போது, தாக்க வந்த இரு மாவோயிஸ்ட்டு பெண் வீரர்களை பாதுகாப்புப் படை சுட்டு கொன்றது. அந்நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் ஒரு நிகழ்வாக, கடந்த ஆண்டு ஏப் 22ஆம் தேதி 40 மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்து சரியாக ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், முதலாவது ஆண்டை நினைவுபடுத்தும் வகையிலே மாவோயிஸ்ட்டுகள் கடந்த சில நாட்களாகப் பதில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதேபோல், ஏப்.9 ஆம் தேதி சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பழி தீர்க்கும் நாளுக்காக காத்திருந்த மாவோயிஸ்ட்டுகள், இன்று காலை கட்சிரோலி பகுதியில் சாலைப் பணிகளை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனத்தின் 27 இயந்திரங்களுக்கும், வாகனங்களுக்கும் மாவோயிஸ்ட்டுகள் தீ வைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கமாண்டோ படை வீரர்கள் ஒரு வாகனத்தில் கட்சிரோலி பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் சென்ற வாகனம் பயங்கர சத்ததுடன் வெடித்துச் சிதறியது. இதில் வீரர்கள் 16 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் சில வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கமாண்டோ படை வீரர்களுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துவருவதாக கூறப்படுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.