தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணியின் நான்கு பிரிவினரும் ஆயுதங்களைத் துறந்து அமைதிக்குத் திரும்புவதற்காக அண்மையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம் போடோலாந்து பகுதியின் வளர்ச்சிக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரூ. 1500 கோடி ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநில அரசுடன் ஏற்பட்ட நல்லிணக்கத்தை அடுத்து, தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணியின் 1500 உறுப்பினர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களைத் துறந்து அமைதிக்குத் திரும்புகின்றனர். கவுகாத்தியில் நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால், மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில், அஸ்ஸாமில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி அமைதிக்கான விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் எழுப்பப்படும் போடோலாந்து கோரிக்கை