கரோனா லாக்டவுன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முழுவதும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திர்களை நாடு திரும்புவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து இந்தியார்களை தனி விமானம் மூலம் தாயகம் அழைத்துவர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, முதல்கட்டமாக வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 12 நாடுகளிலிருந்து இந்தியர்கள் பலர் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக 40 நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை மீட்டு வர 149 விமானங்கள் களமிறக்கப்படுகின்றன. அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, சௌதி அரேபியா, பிரிட்டன், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளுக்கு இந்த விமானங்கள் செல்கின்றன.
வளைகுடா நாடுகளில் மட்டும் சுமார் 80 லட்சம் இந்தியர்கள் தங்கியுள்ள நிலையில், கரோனா தாக்கத்தால் பலர் வேலையிழப்பை சந்திக்க நேரிட்டு இந்தியா திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இன்னும் சில மாதங்களில் லட்சக்கணக்கானோர் இந்தியா திரும்ப நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை!