ETV Bharat / bharat

தலைநகரில் வன்முறை: உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு! - டெல்லியில் 144 தடை உத்தரவு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Delhi
Delhi
author img

By

Published : Feb 25, 2020, 5:00 PM IST

Updated : Feb 25, 2020, 6:26 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, டெல்லியின் ஷாஹீன் பகுதியில் இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. பிப்ரவரி 23ஆம் தேதி, இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாற காவல் துறையினர் கண்ணீர் புகைவீசி கூட்டத்தைக் கலைத்தனர்.

மவுஜ்பூர், ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதையடுத்து, வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை உள் துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால், "வன்முறை கட்டுக்குள் வருவதையே அனைவரும் விரும்புகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டவர இது ஒரு நல்ல தொடக்கம்" என்றார். டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: 'டெல்லி வன்முறை... பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட விருப்பம்' டெல்லி ஆளுநருக்கு சந்திரசேகர் ஆசாத் கடிதம்!

Last Updated : Feb 25, 2020, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.