ETV Bharat / bharat

அதிபர் ட்ரம்பை ஓவியமாக வரைந்த சிறுவன்! - ட்ரம்பை வரவேற்க ஓவியம்

வடோதரா: பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபரும் இருதுருவங்களாக காட்சியளிக்கும் ஓவியத்தை 14 வயது சிறுவன் வரைந்துள்ளார்.

4-yr-old-gujarat-boy-creates-sketch
ட்ரம்பை வரவேற்க ஓவியம் வரைந்த சிறுவன்
author img

By

Published : Feb 21, 2020, 9:40 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று அமெரிக்க அதிபர் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ளார்.

இந்நிகழ்ச்சி வருகிற 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடக்கிறது. அந்த இரண்டு நாள் சந்திப்பில் குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு ட்ரம்ப் வருகை தரவுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இவ்வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் பெரிய அளவில் வரவேற்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக 14 வயது சிறுவன் மஹிர் பட்டேல் ஓவியம் ஒன்றினை வரைந்துள்ளார்.

அந்த ஓவியத்தில் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இருதுருவங்களாக இணைந்து காட்சியளிக்கின்றனர்.

சுமார் 30 மணி நேரத்தில் இந்த ஓவியத்தை நிறைவு செய்துள்ளார். இந்த ஓவியப்பரிசினை சிறுவன் வடோதாரா மாவட்ட ஆட்சியர் மூலமாக அதிபர் ட்ரம்பிடம் சேர்க்கவுள்ளார்.

மஹிர் எட்டாம் வகுப்பு மாணவன். அவரது 5 வயதிலிருந்தே ஓவியம் அவருக்கு கைவசப்பட்டள்ளது. இதற்காக அவர் தனியே பயிற்சியேதும் எடுத்துக் கொள்ளவில்லை.

வெறுமனே யூடியுப் காணொலிகளைப் பார்த்து கற்றுள்ளார். அதிபருக்காக வரைந்த ஓவியத்தைக் குறித்து மஹிர் கூறுகையில், நான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நம் நாட்டு பிரதமர் மோடி ஒன்றாகயிருக்கும் ஓவியத்தை வரைந்துள்ளேன்.

இருநாட்டு தலைவர்களுக்கிடையே உள்ள நட்பையும், அவர்களிடையேவுள்ள பிணைப்பையும் இந்த ஓவியத்தில் காட்டியுள்ளேன். அதிபர் ட்ரம்பை வித்தியாசமான முறையில் வரவேற்க விரும்பியதால், இந்த ஓவியத்தை வரைந்தேன். இதை அவருக்கு பரிசளிப்பேன்”, என்றார்.

மஹிர், அன்னை தெரசா உள்ளிட்ட பிரபலங்களின் ஓவியத்தையும் வரைந்துள்ளான்.

இதையும் படிங்க: மாணவர்களின் நேர்மைப் பண்பை வளர்க்க 'நேர்மை அங்காடி' திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.