குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளரின் 14 மாதக் குழந்தை கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு சமீபத்தில் எந்த விதமான பயண விவரம் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி, இந்தக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக காணப்பட்டதால் இரண்டு நாள்கள் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டன. நேற்று, குழந்தையின் பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துள்ளது" எனத் தெரிவித்தனர்.
இக்குழந்தையின் பெற்றோர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் துறைமுக நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை, அம்மாநிலத்தில் கரோனா வைரஸ் காரணமாக 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் 16 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தீவிரவாதி வீடியோவில் தெரிந்த கடத்தப்பட்ட இத்தாலிய பாதிரியார்!