ETV Bharat / bharat

டெல்லியில் ஒரே நாளில் கோவிட்-19க்கு 131 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 19, 2020, 7:50 AM IST

டெல்லியில் ஒரே நாளில் கோவிட்-19 பாதிப்பாளர்கள் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

131 Covid-19 deaths highest spike in a day so far in Delhi Delhi Covid-19 deaths Covid-19 டெல்லியில் ஒரே நாளில் கோவிட்-19க்கு 131 பேர் உயிரிழப்பு கோவிட்-19 அரவிந்த் கெஜ்ரிவால் அமித் ஷா டெல்லி

டெல்லி: டெல்லியில் புதன்கிழமை (நவ.18) ஒரே நாளில் 131 கோவிட்-19 பாதிப்பாளர்கள் உயிரிழந்தனர். மாநிலத்தில் மொத்தம் 5,03,084 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நவ.18ஆம் தேதி, கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருந்த 131 பேர் உயிரிழந்தனர். இது மாநிலத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகப்பட்ச உயிரிழப்பாகும். இதற்கு முன்னர் நவ.12ஆம் தேதி 24 மணி நேரத்தில் 104 பேர் உயிரிழந்திருந்தனர்.

டெல்லியை பொறுத்தமட்டில் இதுவரை 5,03,084 பேர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 43,147 ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்கள் எடுக்கப்பட்டுள்ளன. 19,085 ஆர்டி-பிசிஆர் டெஸ்ட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர். விகே. பால் செவ்வாய்க்கிழமை (நவ.17) டெல்லியில் கோவிட்-19 இறப்பை தடுப்பதில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், “டெல்லியில் கோவிட்-19 பரவல் தொடக்க காலமான ஜூன் மாதத்தில் 72 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 60 முதல் 70 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதிலும் பாதி மரணங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் நிகழ்ந்தன.

131 Covid-19 deaths highest spike in a day so far in Delhi Delhi Covid-19 deaths Covid-19 டெல்லியில் ஒரே நாளில் கோவிட்-19க்கு 131 பேர் உயிரிழப்பு கோவிட்-19 அரவிந்த் கெஜ்ரிவால் அமித் ஷா டெல்லி
டெல்லியில் ஒரே நாளில் கோவிட்-19க்கு 131 பேர் உயிரிழப்பு!

ஆனால் தற்போது கோவிட்-19 பாதிப்பாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனை, வீடுகளிலும் கரோனா பாதிப்பாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாநிலத்தில் அவசர சிகிச்சை மையங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

இந்நிலையில் டெல்லியில் ஒரே நாளில் கோவிட்-19க்கு 131 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தௌலா கான் பகுதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மேலும், அடுத்த சில தினங்களில் மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு 660 அவசர சிகிச்சை படுக்கைகள் அளிக்கப்படும் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் அதிகரிக்கும் கரோனா: மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.