இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், டெல்லியில் சிவில் லைன்ஸின் ராஜ் நிவாஸ் மார்க் பகுதியில் அமைந்துள்ள, துணைநிலை ஆளுநர் அனில் பைஜலின் அலுவலகத்தில் பணிபுரியும் 13 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.