கர்நாடக மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொற்று குறைவாக இருந்த நிலையில், தற்போது ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்துவருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சித்தம்மா (110). இவருக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் பூரண குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
110 வயது மூதாட்டி கரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ள சம்பவம் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க:ஆப்சென்ட்டான ஆம்புலன்ஸ்; அக்கம்பக்கத்தினர் டார்ச்சரால் தள்ளுவண்டியில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்!