டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் 11ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட 11 சுயேச்சை வேட்பாளர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். பட்டேல், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.
Intro:Body:
சாதியை பதிவு செய்து இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும்: தேர்தலையொட்டி டெல்லி தமிழர்கள் கோரிக்கை
சிறப்பு செய்தி: வீடியோ , புகைப்படங்கள் உள்ளன.
எம்.மணிகண்டன்
பிப்ரவரி 2, 2020:
புது டெல்லி:
இந்திய தலைநகர் புது டெல்லியில் வரும் பிப்ரவரி 8-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு தலைமுறைக்கு மேலாக டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் தங்களது சாதிக்களை டெல்லி அரசின் சாதிப்பட்டியலில் இணைத்து அதன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக 4 லட்சம் பேருக்கு டெல்லில் வாக்குரிமை உள்ளது. கரோல் பாக், ராமகிருஷ்ணபுரம், திரிலோக்புரி, இந்திரபுரி, மயூர் விஹார், ஜானக்புரி மற்றும் ரோஹினி உள்ளிட்டவை டெல்லியின் தமிழ் பிரதேசங்கள் என்று சொல்கிற அளவுக்கு தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த ஓட்டுக்களை குறிவைத்து பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளுமே தங்களது தமிழக தலைவர்களை டெல்லியில் களமிறக்கியுள்ளது.
பாஜக தென்னிந்திய அணி சார்பில் தமிழர்களை சந்திக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனது நெருக்கடியான பணிகளுக்கிடையே இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழர்களிடையே பேசியதன் மூலம் டெல்லி தமிழர்களின் வாக்குகளை பாஜக எந்த அளவுக்கு குறி வைக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழர்கள் மத்திய பேசிய ஜெய்ஷங்கர், “அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற நான், மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களால் கவரப்பட்டே அமைச்சரவையில் இணைய முடிவு செய்தேன். உலகளவில் இந்தியர்கள் என்றால் பெருமைப்படும் நிலையை மோடி உருவாக்கியுள்ளார். மோடியின் உழைப்புக்கு இந்திய மக்கள் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மிகப்பெரிய அங்கீகாரம் அளித்தனர். இப்போது டெல்லி மக்களும் அப்படியே செய்வார்கள்,” என்றார்.
இக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலை சிபி ராதாகிருஷ்ணன், பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் எஸ்.வி.சேகர் மற்றும் ராதாரவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.ஏ விஜயதரணி, மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர் விரைவில் டெல்லிக்கு வந்து தமிழர்கள் பகுதியில் ஓட்டு வேட்டை நடத்தவுள்ளனர்.
“விரைவிலேயே நாங்கள் டெல்லி வந்து பிரச்சாரம் தொடங்கவுள்ளோம். இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் டெல்லி தமிழர்கள் பலருக்கு இடம் வழங்கப்பட்டது.காங்கிரஸின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம்,” என்று விஜயதரணி எம்.எல்.ஏ நம்மிடம் கூறினார்.
இந்த சூழலில் வரவிருக்கின்ற டெல்லி சட்டமன்ற தேர்தலை தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு விசிட் அடித்தது.
அப்போது பெரும்பாலான தமிழர்கள் தங்களது வாழ்க்கை நிலை முன்னேற டெல்லி மாநிலத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், திரிலோக்புரியைச் சேர்தவருமான சி.ஆதிகேசவன் கூறுகையில், “நான் இங்கே 2-ம் தலைமுறையாக வசித்து வருகிறேன். என்னை போலவே பல லட்சம் தமிழர்கள் 2 மற்றும் 3-ம் தலைமுறையாக இங்கே வசிக்கின்றனர். கடந்த காலங்களில் பொருளீட்டி அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே கடும் பிரயத்தனமாக இருந்த நிலையில், தற்போது தான் கல்வி பற்றிய விழிப்புணர்வு வந்துள்ளது. பலர் கல்லூரிகளுக்கு சென்று படித்தாலும், அவர்களுக்கென்று இட ஒதுக்கீடு டெல்லியில் இல்லாத்தால், வேலைவாய்ப்பினை பெற முடியவில்லை. புதிதாக அமையப்போகிற அரசு இதற்கான தீர்வினை அளிக்க வேண்டும்,” என்றார்.
எம்.பஞ்சவர்ணம்(41) என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.
“நான் 40 வருடமாக டெல்லியில் இருக்கிறேன். டெல்லியில் அடித்தட்டு தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது சவாலாகவே உள்ளது. பள்ளி கல்வி முடித்தாலும், உரிய சாதி சான்றிதழ் வழங்கப்படாத்தால், உயர் கல்வி பெறுவதிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் தடை உள்ளது,” என்றார்.
திரிலோக்புரி பகுதியில் முழுக்க முழுக்க விருத்தாச்சலம், சின்னாளப்பட்டி, திண்டுக்கல், காரைக்குடி ஆகிய ஊர்களை பூர்விகமாக கொண்டவர்கள் 2000-த்துக்கும் அதிகமாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் எஸ்.பாப்பாத்தி (45) என்பவர் கூறும் போது, டெல்லி அரசு குடிநீர் மற்றும் மின்சாரக்கட்டணத்தின் மீது வழங்கி வரும் சலுகைகளை தொடர்ந்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றார்.
“கடந்த 2 மாதங்களாக எனக்கு தண்ணீர் கட்டணம் வரவில்லை. இதே போல் மின்சார கட்டணத்திலும் சலுகை கிடைத்துள்ளது. இது தொடரவேண்டும் என்பது எனது கோரிக்கை,” என்கிறார் பாப்பாத்தி.
கரோல் பாக் பகுதியில் உள்ள தமிழ் உணவகங்களுக்கு வாழை இலைகளை 40 வருடமாக விற்பனை செய்து வரும் டி.மூக்கையன் (67) தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக உள்ளார். தேர்தலை பற்றி பேசிய அவர், ” 70-களின் மத்தியில் எம்.ஜி.ஆர் தமிழக அரசியலில் உச்சத்தில் இருந்த நேரத்தில் நான் டெல்லி வந்தேன். அப்போது அதிமுக மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்தாலும், எம்.ஜி.ஆர், இரட்டை இலை பொறித்த படங்கள் எனது கடையில் இடம்பெற்றிருக்கும். ஆனால் கட்சியின் நிலை இப்போது வேறாகிவிட்டது,” என்று கூறியவர் டெல்லி அரசியலுக்கு திரும்பினார்.
“டெல்லியில் தற்போது கேஜ்ரிவாலுக்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால், இந்த முறை அவர் வெற்றி பெற்றால் அவர் வழங்கி வரும், குடிநீர் கட்டண சலுகை, மின்சார கட்டண சலுகை, இலவச பேருது பயண திட்டம் போன்றவை ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருவது அச்சமடைய வைக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால், ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அப்படி செய்யக்கூடாது,” என்கிறார்.
Conclusion: