தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(அக்.13) மாலை மிக கனமழை பெய்தது. குறிப்பாக ஹைதராபாத்தில் இந்த கனமழை காரணமாக நகர் முழுவதும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று, மாலை தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நகரிலுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மேலும், கனமழையால் பாண்ட்லகுடா அருகேவுள்ள முகமதிய மலைப்பகுதியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
ஹைதராபாத்தின் இப்ராஹிம்பட்டினம் என்ற பகுதியிலுள்ள வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட மற்றொரு விபத்தில் 40 வயது பெண்ணும் அவரது 15 வயது மகளும் உயிரிழந்தனர்.
இந்த கனமழை காரணமாக பொதுமக்களின இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதந்த தெலங்கானா; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!