ETV Bharat / bharat

இந்திய - சீன உரசல்: பின்னணியில் உள்ள 10 காரணிகள் - இந்தியா - சீனா மோதல்

டெல்லி: இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டதையடுத்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக மூத்த செய்தியாளர் சஞ்ஜிப் கே. பருவா எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

China
China
author img

By

Published : May 26, 2020, 9:41 AM IST

சீன நாட்டின் தென்பகுதியான இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்ட விவகாரம் முக்கிய ராஜரீக யுக்தி, தந்திர நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இந்திய எல்லைப்பகுதியில் சீனா அவ்வப்போது மேற்கொள்ளும் அத்துமீறல் நடவடிக்கையைப் போல் இந்நடவடிக்கையைக் கருத முடியாது.

இந்த விவகாரம் இந்திய தரப்புக்கு எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கை வரும் என இந்தியத் தரப்பு எதிர்பார்த்த நிலையில், இரு அணுஆயுத நாடுகள் போர்ப்பதற்ற விளையாட்டைத் தங்களின் பல்வேறு யுக்திகள் மூலம் அரங்கேற்றிவருகின்றன.

இந்த நிகழ்வுகள் அரங்கேறுவதற்குப் பல்வேறு பின்னணிகள் உள்ள நிலையில், முக்கியமான பத்து காரணிகளைத் தற்போது பார்க்கலாம்.

காரணி 1

  • சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை நிலவிவரும் நிலையில், இரு நாடுகளின் எல்லை குறித்து தெளிவான வரையறை இல்லை. எனவே, இரு நாடுகளும் அவைகளின் பார்வைக்கேற்றாற்போல் எல்லைப் பகுதிகளில் தங்களது ராணுவத்தைக் குவித்துள்ளன.

காரணி 2

  • இந்திய-சீன எல்லை என்பது கடல்மட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் உயரத்தில் இருக்கும் இமயமலை எல்லையில் உள்ளது. எனவே இந்த எல்லையில் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா மேம்பட்ட திறன் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சீனா இந்த பாதுகாப்புக் கட்டமைப்பு விவகாரத்தில் இந்தியாவைவிட பன்மடங்கு முன்னணியில் உள்ளது. இந்தியா தற்போது தனது பலத்தை அதிகரிக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளது.

காரணி 3

  • மேலே சொன்னதுபோல இமயமலைப் பகுதியில் இந்தியா கட்டமைப்பு வேலைகளில் ஈடுபட்டு தனது பலத்தை அதிகரிப்பதை சீனா என்றும் விரும்பாது. எனவே இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கும்விதமாக எல்லையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை யுக்தியாக மேற்கொண்டுவருகிறது. இதன்மூலம் இந்தியாவின் முன்னெடுப்புப் பணிகளைத் தாமதப்படுத்த முடியும்.

காரணி 4

  • எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளை எப்போதோ மேற்கொள்ள தொடங்கிய நிலையில் இந்தியா இதில் மிகவும் தாமதமாகவே தலைக்காட்டத் தொடங்கியது. 2007ஆம் ஆண்டு தனது கொள்கையில் மாற்றம்செய்த இந்தியா, இந்திய - சீன எல்லைச் சாலைத் திட்டத்தின்கீழ் 73 திட்டங்களை வரும் 2022ஆம் ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்தாண்டுக்குள் இதை முடிக்க இந்தியா பணிகளை முடுக்கிவிடுவதால் தற்போது சீனா இத்தகைய குடைச்சல்களைத் தரத் தொடங்கியுள்ளது.

காரணி 5

  • இந்தத் திட்டத்தின் முக்கியமான சாலைத் திட்டங்களை இந்தியா தற்போது முடித்துள்ளது. சீனா-நேபாளம்-இந்தியா எல்லைகளை ஒட்டிய லிப்புலேக் பகுதியை இணைக்கும் சாலைத்திட்டம் அண்மையில் நிறைவேறியுள்ளது. மேலும், காரக்கோரம் மலைப்பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த 255 கி.மீ. சாலைப்பகுதி 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு அங்கு இந்திய ராணுவத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

காரணி 6

  • இந்தச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றியதன் காரணமாக சீன ராணுவம் எல்லை மீறல் நடவடிக்கையை மேற்கொண்ட உடனே, இந்தியத் தரப்பும் உடனடியாக, பகுதிக்கு விரைந்து செல்லத் தொடங்கியுள்ளது. இது உடனடி எதிர்வினைகளுக்கு வழிவகுக்கிறது.

காரணி 7

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் நிலைப்பாடு தற்போது பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. கில்ஜித் - பல்திஸ்தான் பகுதி மீது இந்தியாவின் கவனம் தற்போது திரும்பியுள்ள நிலையில், சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை இது சீண்டும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

காரணி 8

  • இந்தியா பாகிஸ்தான் எல்லை எல்.ஓ.சி. எனவும், இந்திய - சீனா எல்லை எல்.ஏ.சி. எனவும் அழைக்கப்படுகிறது. எனவே பாகிஸ்தானுடனான எல்லையான எல்.ஓ.சி.இல் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சீனாவின் எல்.ஏ.சி. எல்லையில் பிரதிபலிக்கும். எனவே, இரு எல்லை சிக்கலுக்கும் பிரத்யேக யுக்திகளை இந்தியா கையாள வழிவகுக்கும் சூழல் நிலவுகிறது

காரணி 9

  • இந்தியா தற்போது தனது முக்கிய எதிர்த்தரப்பாகச் சீனாவைப் பார்க்கும் தருணத்தை அடைந்துள்ளது. பாகிஸ்தான் தற்போது சீனாவின் மறைமுக உதவி, தூண்டுதலில்தான் இந்தியாவுக்கு எதிர்வினை ஆற்றும் திறன் பெற்றுள்ளது. எனவே, இந்தியா தற்போது சீனாவுடன் பலப்பரீட்சையை மேற்கொள்ள தன்னை தயார் செய்துவருகிறது.

காரணி 10

  • லடாக், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் என இந்தியா-சீனா-நேபாளம், இந்தியா-சீனா-பூட்டான் எல்லைப் பகுதிகளில் தற்போது சீனா அத்துமீறலை மேற்கொள்வது இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் பெரும் சவாலை முன்வைத்துள்ளது. இந்தச் சூழலில் நேபாளம், பூட்டானின் நம்பிக்கையை இந்தியா எவ்வாறு பெறும் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க: மக்களோடு மக்களாக இணைந்த ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.