உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற என்கவுன்டரில் டிஎஸ்பி உள்ளிட்ட காவல் துறையைச் சேர்ந்த எட்டு பேர் ரவுடி கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய கும்பலின் தலைவன் விகாஸ் தூபே உள்ளிட்ட 35 குற்றவாளிகளை உத்தரப் பிரதேச தனிப்படைக் காவலர்கள் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், இந்த என்கவுன்டரில் சௌபேபூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய சில காவலர்களுக்குத் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் அடிப்படையில், சௌபேபூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய எட்டு காவலர்கள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, விகாஸ் தூபேவுடன் தொடர்பிலிருந்த ஒரு உதவி ஆய்வாளர், மூன்று காவலர்கள் ஆகியோரை கான்பூர் காவல் துறை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சரக்கு வாகனங்களில் பேட்டரி திருடிய மூவர் கைது - வெளியான சிசிடிவி காட்சி