பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் 'காவலாளி நரேந்திர மோடி' என தனது கணக்கின் பெயரை மாற்றினார். இதடையடுத்து பாஜக தலைவர் அமித்ஷாவும் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை, 'காவலாளி அமித்ஷா' என்று மாற்றினார்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன், தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட பல பாஜகவினர் தங்களை காவலாளி என்ற சௌகிதார் என்ற பெயரை ட்விட்டர் பக்கத்தில் வைத்தனர்.
இதில் காவலாளி என்று பொருள் கொண்ட சௌகிதார் என்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் சுமார் 1.5 மில்லியன் ட்விட்டர் பயனாளார்கள் கருத்து பதிவிட்டுவந்துள்ளனர்.