ETV Bharat / bharat

இந்தியா-நேபாளம் இடையே ஆன்மீக சுற்றுலா ரயில்: ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன?

author img

By

Published : Jun 10, 2022, 1:02 PM IST

இந்தியா-நேபாளம் இடையே ராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா செல்ல 'பாரத் கௌரவ்' என்ற புதிய ரயில் ஜூன் 21ஆம் தேதி தனது சேவையை தொடங்குகிறது.

இந்தியா-நேபாளம் இடையே ஆன்மீக சுற்றுலா ரயில்

டெல்லி: இந்திய ரயில்வே அமைச்சகம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த 'பாரத் கௌரவ்' ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. ாரத் கௌரவ் ரயில் இந்தியா-நேபாளம் இடையே ராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும்.

முதல் பாரத் கௌரவ் ரயில் சர்வதேச யோகா தினமான ஜூன் 21ஆம் தேதி டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஒவ்வொரு பெட்டியும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் இந்தியாவின் கலாச்சாரம் தொடர்பான போஸ்டர்கள், கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

அதோடு இரண்டு பெட்டிகள் யோகா பயிற்சிக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகளில் யோகா பயிற்சியாளர் இருப்பர். விருப்பமுள்ள பயணிகள் அங்கேயே யோகா பயிற்சி மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையை கடந்து அண்டை நாடான நேபாளம் செல்லும் முதல் சுற்றுலா ரயில் இதுவாகும்.

18 நாட்கள் சுற்றுலா செல்லும் இந்த ரயில் 8 மாநிலங்கள், 12 நகரங்களை கடந்து செல்கிறது, மேலும் இந்த ரயிலில் 600 பேர் வரை பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21ஆம் தேதி புறப்படும் முதல் ரயில் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கி தற்போது வரை 450 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நபருக்கான பயண கட்டணம் ரூ.65 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கார் எதுக்கு, டிராக்டரே போதும்; 51 டிராக்டர்களில் நடந்த திருமண ஊர்வலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.