ETV Bharat / bharat

தடுப்பூசி தயாரிப்பில் மும்முரம் காட்டும் பாரத் பயோடெக்; நான்கு உற்பத்தி கூடங்களுக்கு கிரீன் சிக்னல்!

ஹைதராபாத்: கரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில் நான்கு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக்
பாரத் பயோடெக்
author img

By

Published : Jan 4, 2021, 11:02 PM IST

பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று(ஜன.3) வழங்கியது. இந்நிலையில், தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில் நான்கு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.

கோவாக்சின் குறித்த போதுமான தரவுகள் சமர்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர் போதுமான தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஓராண்டுக்கு, 700 மில்லியன் டோஸ்களை தயாரிக்கும் வகையில் இந்த நான்கு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பு கூடத்தில் மட்டும் ஓராண்டுக்கு 200 மில்லியன் டோஸ்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

மற்ற நகரங்களில் 500 டோஸ்களை தயாரிக்கவுள்ளோம். 2021ஆம் ஆண்டுக்குள் 7,600 மில்லியன் டோஸ்களை தயாரித்துவிடுவோம். தற்போதுவரை, 20 மில்லியன் டோஸ்களை தயாரித்துள்ளோம். கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 24,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மிக விரிவான ஆராய்ச்சி அனுபவம் கொண்ட ஒரே நிறுவனம் பாரத் பயோடெக்தான் என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நாங்கள் வெளிப்படையாக இல்லை என பலர் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.

அவர்கள் அனைவரும் பொறுமையாக இணையத்தில் உள்ள தடுப்பூசி கட்டுரைகளை படிக்க வேண்டும். இந்திய நிறுவனங்கள் தரக்குறைவானது போல சித்தரிக்கப்படுகிறது. எங்களின் பணிகள் ஃபைசர் நிறுவனத்திற்கு ஒன்றும் சலைத்தது அல்ல" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.