டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் இன்ட்ராநாசல் கரோனா தடுப்பு மருந்துக்கு ரூ. 800 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையுடன் ஜிஎஸ்டி, மருத்துவமனை கட்டணங்களும் கூடுதலாக விதிக்கப்படும். இந்த தடுப்பூசி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு டிசம்பர் 23ஆம் தேதி இன்ட்ராநாசல் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
-
#COVIDVaccines | The #NasalVaccine will be available in Private hospitals@BharatBiotech fixed the price at Rs.800+GST+Hospital charges, reports Sources@MoHFW_INDIA #COVID19 pic.twitter.com/0UfuoEUjq8
— DD News (@DDNewslive) December 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#COVIDVaccines | The #NasalVaccine will be available in Private hospitals@BharatBiotech fixed the price at Rs.800+GST+Hospital charges, reports Sources@MoHFW_INDIA #COVID19 pic.twitter.com/0UfuoEUjq8
— DD News (@DDNewslive) December 27, 2022#COVIDVaccines | The #NasalVaccine will be available in Private hospitals@BharatBiotech fixed the price at Rs.800+GST+Hospital charges, reports Sources@MoHFW_INDIA #COVID19 pic.twitter.com/0UfuoEUjq8
— DD News (@DDNewslive) December 27, 2022
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக இன்ட்ராநாசல் தடுப்பு மருந்தை செலுத்திகொள்ளலாம். முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகள் மூலம் மக்கள் செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை Co-WIN செயலி மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த இன்ட்ராநாசல் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்தது.
இந்த பரிசோதனை முடிவுகளில் இன்ட்ராநாசல் மருந்து மிகவும் பாதுகாப்பானது மற்றும் மிகுந்த நோயெதிர்ப்பு சக்தி கொண்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் BBV154 வகை கரோனா தொற்று பரவிவருவதால், இந்த தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தடுப்பூசியை 2 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் விநியோகிக்கும் உரிமையை பாரத் பயோடெக் நிறுவனம் முன்னதாகவே பெற்றுள்ளது.
இதையும் படிங்க: Corona Virus: நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பு ஒத்திகை