தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மாநிலம் முழுவதும் இலவசமாக கோவிட்-19 தடுப்பூசி அளிக்கப்படும் என உத்தவிட்டார். இதையடுத்து ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் அரசு சார்பில் ஆலோசனை மேற்கொண்டது.
இந்த சந்திப்பில் தெலங்கானா தலைமை செயலாளர் சோமேஷ் குமார், பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா எல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தெலங்கானா அரசுக்கு அதிகளவிலான தடுப்பூசி டோஸ்களை வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பாரத் பயோடெக் நிறுவனமும் அரசின் திட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம் என பதில் தெரிவித்துள்ளது.